ஆய்வுக் கட்டுரைகள்
30 திருமணமும் நபி (ஸல்) அவர்களும்
30 திருமணமும் நபி (ஸல்) அவர்களும்
இஸ்லாம் ஓர் ஆணும் பெண்னும் இனைந்து வாழும் நிலை பற்றி பின்வருமாறு விளக்குகிறது.
01. கணவன். மனைவி -
ஓர் ஆணும் பெண்னும் கணவன் மனைவி என்ற உரிமையுடன் உடலுறவு கொண்டு பிள்ளைகள் பெற்றுக்கெள்ள வேண்டும் என்றால் அக்துன் நிகாஹ் என்கின்ற (வலி.சாட்சிகள்.மணமக்கள் ,மணமக்கள் .மஹர்.ஈஜாப்.கபூல்) விடயங்கள் பூர்த்தி செய்யப்படல்வேண்டும். இவ்வாறு நடைபெற்றால்தால் சட்டபூர்வ கணவன் மனைவியாக வாழ முடியும். இந்த அடிப்படையில் பார்ப்போம் என்றால் நபி (ஸல்) அவர்கள் 11 பெண்களை திருமணம் செய்தார்கள் என்பதை ஹதீஸ் எமக்கு உறுதிப்படுத்துகிறது. இக்கருத்தையே உலகிலுள்ள அனைத்து இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும் ஏகோபிக்கிறார்கள்.
01. அடிமைகள் -
இஸ்லாம் அடிமைகள் விடயத்தையும் தெளிவு படுத்துகிறது. யுத்தத்தில் வெற்றி அடையும் போது யுத்த கைதிகளாக பிடிபடுகின்றவர்கள் அடிமை என்கிற வட்டத்தில் வருவார்கள் . அல்லது சந்தையில் விற்கப்படும் போது பணம் கெடுத்து வாங்குதல் அல்லது ஓருவர் தனது அடிமையை மற்றொருவருக்கு நன்கொடை வழங்குதல் என்பதினூடாக அடிமையை பெற்றுக்கெள்வர். இவ்வாறான பெண் அடிமையுடன் அதன் ஏஜமான் உறவை வைத்துக்கொள்ள முடியும் என்பதை இஸ்லாம் தெளிவு படுத்துகிறது . இதனை இஸ்லாம் திருமணம் என்ற வட்டத்தினுல் கெண்டுவருவதுமில்லை.
ஆகவே, 11 பெண்களை நபி (ஸல்) மணமுடித்து வாழ்க்கை நடத்தினார்கள். இவர்களில் கதீஜா, ஜைனப் பின்த் குஜைமா (ரழி) ஆகிய இருவரும் நபி (ஸல்) வாழும்போதே மரணமானார்கள். மற்ற மனைவிமார்கள் அனைவரும் வாழும்போது நபி (ஸல்) மரணமானார்கள். இவர்களைத் தவிர, கிலாஃப் குடும்பத்தாரைச் சேர்ந்த ஒரு பெண்ணையும், ஹிந்தா குடும்பத்தைச் சேர்ந்த ஜுவைனிய்யா என்ற பெண்ணையும் நபி (ஸல்) மணமுடித்தார்கள். ஆனால், அவர்களுடன் வாழ்க்கை நடத்தவில்லை. இது தொடர்பாக பல மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன.
நபி (ஸல்) அவர்களுக்கு இரு அடிமைப் பெண்கள் இருந்தனர். ஒன்று: மன்னர் முகவ்கிஸ் வழங்கிய மாரியதுல் கிஃப்திய்யா. நபி (ஸல்) அவர்கள் மூலம் இவருக்கு ‘இப்றாஹீம்’ என்ற ஆண் மகவு பிறந்து பாலப்பருவத்திலேயே (ஹிஜ்ரி 10, ஷவ்வால் பிறை 28 அல்லது 29, (கி.பி. 632 ஜனவரி 27ல்) இறந்து விட்டது.
இரண்டாவது அடிமை: ரைஹானா பின்த் ஜைது. இவர் பனூ நளீர் அல்லது பனூ குறைளா சமூகத்தைச் சேர்ந்தவர். பனூ குறைளாவுடன் போரில் கைது செய்யப்பட்ட இப்பெண்ணை நபி (ஸல்) தனது பங்கில் எடுத்துக் கொண்டார்கள். இவரை உரிமையிட்ட பிறகு நபி (ஸல்) மணமுடித்தார்கள். மேலும் ஒர் கூற்றின் பிரகாரம் இரண்டு அடிமைப் பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் இருந்ததாக குறிப்பிடப்படுகிறது. ஒருவர் ஜமீலா, இவர் போர்க் கைதியாக கிடைத்தவர். மற்றொருவர் பெயர் தெரியவில்லை, அவரை ஜைனப் பின்த் ஜஹ்ஷ் நபியவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள்.
இவைகள் ஆதாரபூர்வமானதாக நிருவிக்கப்படவில்லை.
03. விபச்சாரம் – சுதந்திரமான ஓர் ஆணும் பெண்ணும் திருமண ஒப்பந்தமின்றி உடலுறவு வைத்துக் கொள்வதை விபச்சாரம் என்கிறோம்.
மெளலவி அலி அஹமட் றஸாதின் பேச்சில் “வாழ்ந்து காட்டியது யாரோடு ஓரு மனைவியோடு அல்ல இரு மனைவியோடு அல்ல முன்று மனைவியோடு அல்ல நபி (ஸல்) அவர்களுக்கு அக்து (திருமண ஒப்பந்தம்) நடந்தது (திருமண ஒப்பந்தம்) நடக்காதது என 30 திருமணங்கள்” என தெளிவாக குறிப்பிடுகிறார்.
ஆதாரபூர்வமான ஏற்றுக் கொள்ளப்பட்ட முடிவின் பிரகாரம் நபி (ஸல்) அவர்களுக்கு 11 மனைவிகள் (திருமண ஒப்பந்தத்துடன்) அடிமை – 01. மொத்தமாக நபி (ஸல்) அவர்கள் உறவு கெண்டவர்கள் 12 பேர்கள் எனின் மற்றைய 18 திருமணம் முடித்த மனைவிமார்கள் யார்? அவர்கள் எங்கே?
திருமண ஓப்பந்தத்துடன் இணைந்தவர்கள் சரியான கணவன் மனைவி என்போம் .
திருமணம் ஒப்பந்தம் இன்றி இணைபவர்களை (அடிமைகள் தவிர) நாம் விபச்சார விபச்சாரி என்போம்.
மெளலவி அலி அஹமட் றஸாதியின் பேச்சில் எதை நாடுகிறார். ?
எமதூரில் நபி ( ஸல்)அவர்களுக்கு 30 திருமணமா!. என்ன இது புதுமை? என்ற கேள்விக்கு விடைகான வேண்டியுள்ளது .
இவரது கருத்து தெடர்பாக நிந்தவூர் உலமா சபையின் நிலை என்ன? அவரை அழைத்து விளக்கம் கோரியதா?
நிந்தவூரிலுள்ள படித்த உலமாக்கள் ஏன் மெளனம் காக்கிறார்கள்?
நம்பிக்கையாளர் சபையின் நிலை என்ன? அல்லது அதனை ஏற்று சரி காண்கிறீர்களா?
- மக்கள் கேள்வி மன்றத்தின் முன் -
இவ்வண்ணம்
தஃவா பிரிவு
இஸ்வா அமைப்பு
நிந்தவூர்