Search

Subscribe Now

Subscribe in a reader Facebook page Follow me

Enter your email address:

Register & Get Daily Updates to Your Email Address

ISWAA Live Feed

இணையத்தளம் பற்றி


அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹத்தஆலாவின் திரு நாமத்தால்,

ஸலவாத்தும் ஸலாமும் முஹம்மத் (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் கிளையார்கள்,தோழர்கள் மீதும் அவர்களின் அடிச் சுவட்டைப் பின்பற்றி வாழும் நல்லடியார்கள் மீதும் உண்டாவதாக!www.iswaasso.com என்ற பெயரிலான இவ்விணையத் தளத்தை அங்குரார்ப்பணம் செய்து வைப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.இவ்வெளிமையான பணியை ஆரம்பித்து வைப்பதற்கு எமக்குத் துணைபுரிந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் - அல்ஹம்துலில்லாஹ். இன்று இஸ்லாமிய அழைப்புப் பணியை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு சிறந்த ஊடகமாக இணையத்தளத்தைப் பயன்படுத்தலாம்.

'இன்டெர்நெட்' தளத்திற்கூடான தஃவாவை  'காலத்தின் ஜிஹாத்' என நாம் கருதுகின்றோம். 
 
இஸ்லாம் உலகமயமானது;முழு உலகத்திற்குமானது.அதன் தூதை உலக மயப்படுத்தும் பெரும் பொறுப்பு எம்மைச் சார்ந்ததாகும்.

இவ்விலட்சியப் பணியை பயன் உறுதி மிக்கதாகவும் வினைத்திறன் கொண்டதாகவும் மேற்கொள்வதற்கு இக்காலத்தில் பெருமளவில் துணை புரியக் கூடிய சாதனமாக இணையத்தளம் விளங்குகின்றது. இந்த வகையில் அறபு, ஆங்கில மொழிகளில் இஸ்லாமிய இணையத்தளங்கள் பல இயங்கி வருகின்ற போதிலும் தமிழில் காணப்படுகின்ற இஸ்லாமிய இணையத்தளங்கள் விரல்விட்டு எண்ணக்கூடியவையே. தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பலகோடி மக்கள் உலகின் பல நாடுகளிலும் வாழுகின்றார்கள். தமிழ் நாட்டில் மாத்திரம் 6 கோடி 24 இலட்சம் தமிழ் பேசும் மக்கள் இருக்கின்றார்கள். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளிலும் கணிசமான தொகையில் தமிழ் பேசும் சமூகங்கள் வாழுகின்றன.உலகில் தமிழ் பேசும் முஸ்லிம்களின் தொகை 80 இலட்சங்களை தாண்டிச் செல்கின்றது. இவர்களின் ஆன்மீக, தார்மீக, ஒழுக்க, பண்பாட்டு மேம்பாட்டிற்கான வழிகாட்டல்களை வழங்கும் இணையத்தளங்கள் இன்னும் தேவைப்படுகின்றன.

'இஸ்லாத்தை உலகிற்க்கு உறுதியாக தூய வடிவில் பரப்ப வோண்டிய இத்தேவையை ஓரளவேனும் பூர்த்தி செய்யும் நோக்குடனேயே இவ்விணையத்தளம் ஆரம்பித்து வைக்கப்படுகின்றது.சிங்கள மொழியில் இஸ்லாமியப் போதனைகளைப் பற்றிப் பேசும் இணையத்தளங்கள் ஓரிரண்டு மட்டுமே காணப்படுகின்றன. சுமார் ஒரு கோடியே 30 இலட்சம் சிங்கள மொழி பேசும் மக்கள் இலங்கையில் வாழ்கின்றார்கள்;இவர்களுள் கணிசமான தொகையினர் உலகின் பல நாடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள்;சிங்கள மொழிமூலம் கல்வி கற்ற,கற்கின்ற சுமாரான தொகை முஸ்லிம்களும் இருக்கின்றார்கள். இவர்களுக்காக வெகு விரைவில் பல ஆக்கங்களை சிங்கள மொழியிலும் இவ்விணையத்தளத்திற்கூடாக வழங்குவதற்கு உத்தேசித்துள்ளோம் என்பதை இங்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

இவ்வினையத்தளம் இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. 01. சமூக, கலாச்சார, நலன்புரி, கல்வி, சமயம் தொடர்பான இஸ்வா அமைப்பின் பகுதி 02. தஃவா பகுதியாகும்.

இவ்விணையத்தளத்தில் மற்றும் பல அறிஞர்கள்,தாஇகள் முதலானோரின் ஆக்கங்களும்;இடம் பெறல் வேண்டும் என்பது எமது எதிர்ப்பார்ப்பும் நோக்கமுமாகும்.

'இஸ்லாமிய தஃவாவுக்கான தமிழ் சிங்கள மொழிகள் மூலமான ஒரு தொலைகாட்சி சேவை ஆரம்பிக்கப்படல் வேண்டும்'

இஸ்லாமிய தஃவாவுக்கான தமிழ்,சிங்கள மொழிகள் மூலமான ஒரு தொலைகாட்சி சேவை ஆரம்பிக்கப்படல் வேண்டும் என்பது எமது எதிர்கால திட்டமாகும்.இத்துறையில் னுச.சாகிர் நாய்க் அவர்களின் Pநயஉந ஊhயnநெட எமக்கு சிறந்த முன்மாதிரியாக அமையும் என நம்புகின்றோம்.

எந்தவொரு பணியையும் ஆரம்பித்து வைப்பது அவ்வளவு தூரம் சிரமமானதல்ல தொடர்வதுதான் கஷ்டமானது. அண்மைக்கால வரலாற்றில் சர்வதேச, உள்நாட்டு மட்டங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்ட எத்தனையோ காத்திரமான முயற்சிகள் இடைநடுவில் நின்று விட்டதை அல்லது ஸ்தம்பித்துப் போனதை அவதானிக்க முடிகின்றது.

ஒரு பணியை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு வேகமும் ஆர்வமும் மட்டும் போதுமானதல்ல.மனித வளமும் ஏனைய பௌதீக,பொருளாதார வளங்களும் இன்றியமையாதவையாகும்.இந்தப் பணியும் அல்லாஹ்வின் அருளால் தொடரவேண்டுமெண்டிருந்தால் குறித்த வளங்கள் தொடர்ந்தேச்சியாக கிடைக்கப் பெறுவதை உத்தரவாதப்படுத்தல் வேண்டும்.

இந்தவகையில் இவ்விணையத்தளம் உங்கள் அனைவரினதம் ஒத்துழைப்பை நாடிநிற்கின்றது. உங்களது அறிவால், ஆற்றலால், பொருளால், பௌதீக வளங்களால் இதன் இருப்புக்கும் மேம்பாட்டுக்கும் நீங்கள் பங்களிப்புச் செய்யலாம்.

இறுதியாக இவ்விணையத்தளத்திற்கூடாக நாம் அனைவரும் பயன் பெற எல்லாம் வல்ல அல்லாஹ் துணை புரிய வேண்டும் என பிரார்த்திப்பதோடு இப்பணிக்காக பல மாதங்களாக இரவு பகலாக உழைத்துவரும் இஸ்லாமிய ஊழியர்களுக்கும், சகோதரர்களுக்கும் அவனது ரஹ்மத்தும், பரக்கத்தும், மஃபிரத்தும் கிட்ட வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றோம். வஆகிரு தஃவானா அனில் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்!

 

Share this post

Submit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TwitterSubmit to LinkedIn